அரசும், போலீசும் வேடிக்கை பார்த்தது போதும்: ஆர்.ஆர்.கோபால்ஜி காட்டம்

  Newstm Desk   | Last Modified : 07 Feb, 2019 04:20 pm
r-r-gopalji-condemns-the-murder-of-pmk-leader

திருப்புவனத்தில், மதமாற்றத்தை கண்டித்த, பா.ம.க., நிர்வாகி ராமலிங்கம் வெட்டிக் கொல்லப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள, விஷ்வ ஹிந்து பரிஷத் (தமிழ்நாடு) அமைப்பின் பொதுசெயலரும், ‛தினமலர்’ பங்குதாரருமான, ஆர்.ஆர்.கோபால்ஜி,  கொலையாளிகள் மற்றும் அதன் பின்னணியில் உள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

இது குறித்து, ஆர்.ஆர்.கோபால்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:  ‛‛திருப்புவனத்தில், மதமாற்றத்தில் ஈடுபட முயன்றவர்களை கண்டித்து, துணிச்சலாக நியாயம் கேட்ட, பா.ம.க.,நிர்வாகி ராமலிங்கம், கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். 

இது, கடும் கண்டனத்திற்குரியது. மத மாற்றத்தை கண்டித்தவருக்கே இந்த நிலை என்றால், மதம் மாற மறுப்பவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படலாம். தமிழகத்தில் எந்த பயங்கரத்தையும் நடத்தலாம் என்ற எண்ணம் வளர்ந்து விட்டதை ஆட்சியாளர்கள் புரிந்து கொண்டு, மதம் மாற்றும் கும்பலை தடுத்து நிறுத்தாவிட்டால், மாநிலத்தில் அமைதி சீர்குலைந்துவிடும். 

போலீசும், அரசும் வேடிக்கை பார்த்தது போதும். ராமலிங்கத்தை கொலை செய்தவர்கள் மட்டுமின்றி, அதன் பின்னணியில் இருப்பவர்களையும் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். போலீசார் இனிமேலாவது முதுகெலும்புடன் நடந்து கொள்ள வேண்டும். தமிழகத்தை வன்முறை மாற்ற நடக்கும் முயற்சிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்’’ என, அந்த அறிக்கையில் குறிப்பபிட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close