டிடிவி தினகரன் ஆர்.கே. நகரில் வெற்றி பெற்றது 'டோக்கன்' வெற்றி தான். அதாவது தற்காலிக வெற்றி தான் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
இன்று இரண்டாவது முறையாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், "டிடிவி தினகரனின் அமமுககட்சியை ஒரு கட்சியாகவே நாங்கள் கருதவில்லை. எனவே அவர்களுடன் கூட்டணி என்பது சாத்தியமே இல்லை. வருகிற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அமமுக வெற்றி பெறாது. வெற்றி பெற்றால் தானே அவர்களுடன் இணைவது? அவர்கள் அதிமுகவுடன் தான் சேரும் நிலைமை ஏற்படுமே தவிர, நாங்கள் சென்று அவர்கள் கட்சியில் சேரும் நிலைமை வராது.
டிடிவி தினகரன் ஆர்.கே. நகரில் வெற்றி பெற்றது 'டோக்கன்' வெற்றி தான். அதாவது தற்காலிக வெற்றி தான். இருபது ரூபாய் டோக்கனை வைத்துக்கொண்டு ஆர்.கே.நகர் மக்கள் தினகரனை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் அதிமுக கண்டிப்பாக மாபெரும் வெற்றி பெறும். கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு எடுக்கப்படும்.
மக்களின் நாடித்துடிப்பை முழுமையாக உணர்ந்தவர்கள் அதிமுகவினர் தான். எனவே அதை வைத்து தான் தமிழக பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து வகுப்பினருக்கும் அனைத்து தரப்பினரையும் கருத்தில் கொண்டு இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது" என்றார்.
newstm.in