வாக்காளர்களுக்கு ஒப்புகை சீட்டு குறித்து விழிப்புணர்வு !

  டேவிட்   | Last Modified : 07 Feb, 2019 05:50 pm
acknowledgement-slip-for-voters-awareness-on-every-saturday

ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள், எவ்வாறு பயன்படுகிறது என்பதை அரியும் விதமாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு, தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை சரிபார்க்கும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொருத்தப்படும் என உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்திருந்தது.  இதன்  தொடர்ச்சியாக ஒப்புகை சீட்டு இயந்திரங்களின் பயன்பாடு குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தமிழகதில் உள்ள 67,600 வாக்குச்சாவடி மையங்களுக்கும் நேரடியாக, வாகனங்கள்  மூலம் இயந்திரங்களை கொண்டு சென்று எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என மக்களிடையே விளக்கும் நிகழ்வு, இம்மாத இறுதி வரை அனைத்து சனிக்கிழமைகளிலும் நடைபெறும் என, தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close