2019-20 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
தமிழகத்தின் துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை 10 மணியளவில் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றுகிறார்.
இது அவர் தாக்கல் செய்யவுள்ள 8-ஆவது பட்ஜெட்டாகும். அதேபோன்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சமர்பிக்கவுள்ள 3-ஆவது பட்ஜெட் இதுவாகும்.
மக்களவைத் தேர்தலுக்கு முன் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் என்பதால், ஏழை, எளிய மக்களை கவரும் வகையிலான பல்வேறு அறிவிப்புகள் இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, சிறு, குறு விவசாயிகளுக்கு உதவித்தொகை, பெண்களுக்கான மானிய ஸ்கூட்டர் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு உள்ளிட்ட அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறும் எனத் தெரிகிறது.
newstm.in