விமான நிலைய கழிவறையில் ஒரு கிலோ தங்கம் கண்டெடுப்பு!

  Newstm Desk   | Last Modified : 08 Feb, 2019 09:42 am
one-kg-gole-sezied-in-chennai-airport-toilet

சென்னை விமான நிலைய கழிவறையில் இன்று காலை ஒரு கிலோ தங்கம் கண்டெடுக்கப்பட்டது.

கழிவறையின் தண்ணீர் தொட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.34 லட்சம் மதிப்புடைய  தங்கத்தை  சுங்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

மேலும் இதுதொடர்பாக பஞ்சாப் சேர்ந்த இந்தர்பால் என்ற பயணியை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அப்போது துபாயிலிருந்து தான் தங்கம் கடத்தி வந்ததாக இந்தர்பால் ஒப்பு கொண்டதாக தெரிகிறது.

முன்னதாக இன்று அதிகாலை சென்னை விமான நிலையத்தில் கழிவறைகள் திடீரென மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close