#TNBudget Live Updates: இரண்டரை மணி நேரம் பட்ஜெட் உரையாற்றினார் ஓ.பன்னீர்செல்வம்

  Newstm Desk   | Last Modified : 08 Feb, 2019 12:56 pm

tamilnadu-budget-live-updates

12.56: பட்ஜெட் உரை முடிவுற்றது! சட்டப்பேரவை 11ம் தேதிக்கு ஒத்திவைப்பு

11.30: 10, 11. 12 வகுப்பு மாணவர்களுக்கு தொடர்ந்து 5000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் 

11.28: 2011-2012 ஆம் ஆண்டில் மாநிலத்தில் 1,03,600 ரூபாயாக இருந்த தனிநபர் வருமானம் 2017-2018 ஆம் ஆண்டில் 1,42,267 ரூபாயாக உயர்ந்துள்ளது.

11.26: ரூ.1,125 கோடியில் தேனி, சேலம், ஈரோட்டில் 250 மெகாவாட் மிதக்கும் சூரிய திட்டம்

ரூ.2,350 கோடியில் 500 மெகாவாட் கடலாடி, மிக உய்ய சூரிய பூங்கா திட்டம்

11.25: முதியோர் உதவித்தொகை, இலவச வேட்டி, வேலை உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு ரூ.3,958 கோடி ஒதுக்கீடு

11.24: பள்ளிக் கல்வித்துறைக்கு, கடந்த நிதியாண்டை விட, 1,552 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு

11.17: சென்னையைச் சுற்றியுள்ள வனப்பகுதியை பாதுகாக்க ரூ 25 கோடி ஒதுக்கீடு

அடையாறு மற்றும் கூவம் நதி சீரமைப்பு, சதுப்பு நில மீட்டெடுப்பு திட்டத்துக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு

11.16: தமிழக அரசின் அனைத்து திட்டங்களுக்கும் சேர்த்து, 2,63,828 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

11.15: பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், ஒரு லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயம்

11.08: துாய்மை இந்தியா திட்டத்திற்கு, 400 கோடி ரூபாய் ஒதுக்கீடு

11.07: இந்து சமய அறநிலையத்துறைக்கு, 281 கோடி ரூபாய் ஒதுக்கீடு

11.06: பாெங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட, 1985 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது

11.05: அத்திக்கடவு- அவிநாசி திட்டம் விரைவில் தொடங்கப்படும்: இதற்காக ரூ 1000 கோடி நிதி ஒதுக்கீடு

அணைகள் புனரைமப்புக்காக, 43 கோடி ரூபாய் ஒதுக்கீடு

நாட்டின, கலப்பின காளைகள் இனப்பெருக்கத்திற்கு, 100 கோடி ரூபாயில் திட்டம்

11.04: பாடப்புத்தகங்கள் விலையில்லாமல் வழங்க ரூ. 1656 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

11.02: கால்நடை துறைக்கு, 1,252 கோடி ரூபாய் ஒதுக்கீடு

11.00: டாஸ்மாக் மூலம் அரசுக்கு 7,262 கோடி ரூபாய் வரி வருவாய் கிடைத்துள்ளது.

10.54: விலையில்லா வெள்ளடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ், 8.72 லட்சம் பேர் பலன் அடைந்துள்ளனர்.

10.52: பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை, 33 ஆயிரமாக குறைந்துள்ளது

10.50: பால்வளத்துறைக்கு ரூ 258.45 கோடி ஒதுக்கீடு

10.49: சென்னையில் ரூ. 2 ஆயிரம் கோடி செலவில் நிலத்தடி ம்றறும் அடுக்குமாடி வாகன நிறுத்த வசதிகள் செய்யப்படும். 

10.48: மாற்றுத் திறனாளிகளுக்கு 3 ஆயிரம் ஸ்கூட்டர்கள் வழங்கப்படும் 

வீட்டு வசதி துறைக்கு ரூ. 625 கோடி ஒதுக்கீடு

10.45: உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு தீவிர முனைப்பு காட்டி வருகிறது. நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு ரூ.284 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

10.40: 2698 டாஸ்மாக் கடைகள் மூடப்படும். 

10.39: மத்திய அரசின் நிதி உதவியுடன் மாநில அரசின் மொத்த வருவாய் 197721 கோடியாக இருக்குமென மதிப்பீடு

10.36: கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1700 கோடியில் ஒரு லட்சம் வீடுகள் கட்ட நடவடிக்கை

10.35: 2000 பம்ப் செட் வழங்கப்படும்.

10.34: காவல்துறையில் காலியாக உள்ள 9975 இடங்கள் நிரப்பப்படும்

10.33: சமூக நலத்துறைக்கு ரூ. 1772 கோடி ஒதுக்கீடு 

10.30: அண்ணா பல்கலை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ. 100 கோடி அறிவிப்பு

10.29: தகவல் தொழில் நுட்பத்துறைக்கு 140 கோடியும், சுற்றுலாத்துறைக்கு 100 கோடியும் ஒதுக்கீடு

10.28: திருமங்கலம், கள்ளிக்குடி,   திருபரங்குன்றத்தில் புதிய வருவாய் கேட்டம்

10.27: நகராட்சிகளில் குடிநீர் வசதிக்காக ரூ. 18700 கோடி நிதி ஒதுக்கீடு

10.26: மெட்ரோ ரயில் திட்டத்தில் 2681 கோடி ஒதுக்கீடு

10.25: மொத்தம் 2 ஆயிரம் மின்சார பேருந்துகள் வாங்கப்படும்

10.21: ராமேஸ்வரத்தில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பெரியல் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி

10.20: பேரிடர் மேலாண்மை நிதிக்காக ரூ.825 கோடி ஒதுகீட

10.16: வறுமைக் கோட்டிற்கு கீழ் வரும் குடும்பத்தினருக்கு விரிவான விபத்து ஆயுள் காப்பீட்டு திட்டம் அறிமுகம்

10.14: 20 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்படும்: சட்டபேரவையில் துணை முதல்வர் உரை

10.11: அரசின் செலவினங்கள் 2,08,671 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

10.08: தமிழகத்தின் கடன் 3,97,495 கோடி

10.05: நிதி பற்றாக்குறை ரூ. 44, 176 கோடி 

10.04: உள்ளாட்சி அமைப்புகளுக்கு  5,178 கோடி ஒதுக்கீடு

10.03: அலை வீசும் கடலோரம் துயல் கொண்டு இலை வீசும்... உரையை தொடங்கினார் ஓபிஎஸ்

10.02: ஓ.பன்னீர்செல்வம் தனது உரையை தொடங்கினார்

9.58: 10 மணிக்கு 2019-2020க்கான தழிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 

9.52: 8வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார் ஓ.பன்னீர் செல்வம்

9.50: பட்ஜெட் உரை அடங்கிய பெட்டியுடன் முதல்வரும், நிதி அமைச்சரும் சட்டப்பேரவைக்கு வந்தனர். 

9.46: சட்டபேரவைக்கு வந்தார் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்

9.32: இன்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சந்திதார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close