சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! பட்ஜெட்டை தாக்கல் செய்தார் ஓபிஎஸ்!

  Newstm Desk   | Last Modified : 08 Feb, 2019 10:09 am
tn-budget-2019

2019-20 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் சற்றுமுன் தொடங்கியுள்ளது. துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் எட்டாவது முறையாக இன்று தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான உரையை ஓ.பன்னீர் செல்வம் வாசித்து வருகிறார். 

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டு முதல் கூட்டம் கடந்த ஜனவரி 2ம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. பின்னர், மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்த பின்னர் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெற்றது. ஜனவரி 8ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உரையுடன் சட்டசபை கூட்டம் முடிவடைந்தது.

தொடர்ந்து இன்று பிப்ரவரி 8ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் எட்டாவது முறையாக இன்று தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் குறித்து ஓபிஎஸ் பேசி வருகிறார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close