2,698 டாஸ்மாக் கடைகள் மூடல்: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 08 Feb, 2019 11:53 am

tn-budget-2019-2698-tasmac-shops-to-be-closed

நடப்பு நிதியாண்டில் 2,698 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை, 7, 896 இருந்து 5,198 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

2019-20 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் சற்றுமுன் தொடங்கியுள்ளது. துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் எட்டாவது முறையாக இன்று தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான உரையை ஓ.பன்னீர் செல்வம் வாசித்து வருகிறார். 

அதில், நடப்பு நிதியாண்டில் 2,698 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.  இதன் மூலம் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை, 7, 896 இருந்து 5,198 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 

மேலும், டாஸ்மாக் மூலம் அரசுக்கு 7,262 கோடி ரூபாய் வரி வருவாய் கிடைத்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close