தமிழக பட்ஜெட் 2019: விவசாயிகளுக்கான அறிவிப்புகள் என்னென்ன?

  Newstm Desk   | Last Modified : 08 Feb, 2019 11:28 am
tn-budget-2019-for-farmers

2019-20 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் சற்றுமுன் தொடங்கியுள்ளது. துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் எட்டாவது முறையாக இன்று தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான உரையை ஓ.பன்னீர் செல்வம் வாசித்து வருகிறார். 

அதில் வேளாண் துறையின் கீழ் கீழ்கண்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

►  உணவு மானியத்திற்காக ரூ.1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

►  விவசாயிகளுக்கு 50% மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் வழங்கப்படும்.

►  ​​​​​​​தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்துக்கு ரூ.349.4 கோடி ஒதுக்கீடு.

►  ​​​​​​​விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்

►  ​​​​​​​பால் உற்பத்திக்காக, 237 கோடி ரூபாயில் 3 புதிய திட்டங்கள் கொண்டு வரப்படும். 

►  ​​​​​​​விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ், 8.72 லட்சம் பேர் பலன் அடைந்துள்ளனர்.

​​​​​​​

►  ​​​​​​​வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்படும். 

►  ​​​​​​​2019-20ல் நெல் கொள்முதல் ஊக்கத்தொகைக்காக ரூ.180 கோடி ஒதுக்கீடு.

►  ​​​​​​​சாதாரண நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு ரூ.1,800, சன்ன ரக நெல்லுக்கு ரூ.1,830 வழங்கப்படும்.

►  ​​​​​​​வேளாண் துறைக்கு, கடந்த நிதியாண்டை விட 1,634 காேடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close