சென்னை, மதுரை, கோவையில் மின்சாரப் பேருந்துகள்!

  Newstm Desk   | Last Modified : 08 Feb, 2019 11:45 am

tn-budget-2019-electric-buses

சென்னை, கோவை மற்றும் மதுரையில் மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

2019-20 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் சற்றுமுன் தொடங்கியுள்ளது. துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் எட்டாவது முறையாக இன்று தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான உரையை ஓ.பன்னீர் செல்வம் வாசித்து வருகிறார். 

அதில், அரசு சார்பில் மொத்தம் 2000 மின்சார பேருந்துகள் வாங்கப்படும். சென்னை, கோவை, மதுரையில் முதற்கட்டமாக 500 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close