தமிழக பட்ஜெட் 2019: கல்வித்துறையில் முக்கிய அறிவிப்புகள்!

  Newstm Desk   | Last Modified : 08 Feb, 2019 12:09 pm
tn-budget-2019-education-department

2019-20 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் சற்றுமுன் தொடங்கியுள்ளது. துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் எட்டாவது முறையாக இன்று தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான உரையை ஓ.பன்னீர் செல்வம் வாசித்து வருகிறார். 

அதில், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கீழ்கண்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

►  பள்ளிக்கல்வித்துறைக்கு கடந்த 2018-19 நிதியாண்டில் ரூ.27,205 கோடி ஒதுக்கிய நிலையில், 2019-20ம் நிதியாண்டில் ரூ.28,757 கோடி ஒதுக்கீடு

 

►  பள்ளிக் கல்வித்துறைக்கு, கடந்த நிதியாண்டை விட, 1,552 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு

►  உயர் கல்வித் துறைக்கு கடந்த 2018-19 நிதியாண்டில் ரூ. 4,620 கோடி ஒதுக்கிய நிலையில், 2019-20ம் நிதியாண்டில் ரூ.4,584கோடி ஒதுக்கீடு 4584.21 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

►  உயர் கல்வித்துறைக்கு, கடந்த நிதியாண்டை விட, 36 கோடி ரூபாய் குறைவாக நிதி ஒதுக்கீடு

►  பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 33,000 ஆக குறைந்துள்ளது. 

►  பெண் குழந்தைகள் கல்வி ஊக்கத் திட்டத்திற்கு 47.6 கோடி ஒதுக்கீடு. மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளில் பெண் குழந்தைகளை அதிகம் சேர்க்க வைக்க இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close