மானிய விலையில் இருசக்கர வாகனம்: பட்ஜெட்டில் ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு!

  Newstm Desk   | Last Modified : 08 Feb, 2019 12:19 pm

tn-budget-2019-free-cycle-scooters

மானிய விலையில் இருசக்கர வாகன திட்டத்திற்காக ரூபாய் 250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக பட்ஜெட் உரையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

2019-20 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் சற்றுமுன் தொடங்கியுள்ளது. துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் எட்டாவது முறையாக இன்று தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான உரையை ஓ.பன்னீர் செல்வம் வாசித்து வருகிறார். 

அதில், மானிய விலையில் இருசக்கர வாகனத் திட்டத்திற்காக ரூபாய் 250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்திற்கு 138 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close