தமிழக பட்ஜெட்: விலையில்லா ஆடு, மாடு, கோழி வழங்கும் திட்டம்

  Newstm Desk   | Last Modified : 08 Feb, 2019 01:11 pm
tn-budget-2019-update

2019-20 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் எட்டாவது முறையாக இன்று தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான உரை சுமார் இரண்டரை மணி நேரமாக நடைபெற்றது. 

பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஆடு, மாடு, கோழி வளர்ப்பு குறித்து கீழ்கண்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. 

►  விலையில்லா மாடு, ஆடு திட்டம் வரும் நிதியாண்டிலும் தொடரும் என்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் அறிவித்துள்ளார். 

►  தீவன அபிவிருத்தி திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

►  75,448 பெண்கள் இலவச கறவை மாடு திட்டத்தால் பலன் பெற்றுள்ளனர்.

►  விலையில்லா வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகள் திட்டத்திற்காக 198.75 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

►  நாட்டுக்கோழி வளர்ப்பை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

►  வரும் நிதியாண்டில் 10,000 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

►  உரிய காலத்தில் பயிர்க்கடன் திரும்ப செலுத்துவோருக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close