சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் தொடங்கியது!

  Newstm Desk   | Last Modified : 08 Feb, 2019 01:16 pm
budget-session-finished-assembly-meeting-is-going-on

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் உரை நிறைவு பெற்றதையடுத்து, சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் தொடங்கியுள்ளது. 

2019-20 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் எட்டாவது முறையாக இன்று தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான உரையை ஓ.பன்னீர் செல்வம் சுமார் இரண்டரை மணி நேரமாக வாசித்தார். 

சரியாக பிற்பகல் 12.30 மணிக்கு பட்ஜெட் உரை நிறைவடைந்ததையடுத்து, பிப்ரவரி 11ம் தேதி சட்டப்பேரவை மீண்டும் கூடும் என்று கூறி சபாநாயகர் தனபால் பேரவையை ஒத்திவைத்தார். 

இதையடுத்து, சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் தொடங்கியுள்ளது. இதில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர். திமுக சார்பில் பிச்சாண்டி, காங்கிரஸ் சார்பில் ராமசாமி கலந்துகொண்டுள்ளனர். 

இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மீதான விவாதம் எவ்வளவு நாட்கள் நடைபெற வேண்டும், பேரவையின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தவே இந்த அலுவல் ஆய்வுக்கூட்டம் நடத்தப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close