பிப்.11 முதல் 14 வரை பட்ஜெட் மீதான விவாதம்! - அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் முடிவு

  Newstm Desk   | Last Modified : 08 Feb, 2019 01:24 pm
tn-budget-2019-budget-session-will-be-held-from-feb-11-to-14

பட்ஜெட் மீதான விவாதம் வருகிற பிப்ரவரி 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறவுள்ளதாக சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுகூடத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

2019-20 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் எட்டாவது முறையாக  இன்று பேரவையில் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான உரையை ஓ.பன்னீர் செல்வம் சுமார் இரண்டரை மணி நேரமாக வாசித்தார். 

பிற்பகல் 12.30 மணிக்கு பட்ஜெட் உரை நிறைவடைந்ததையடுத்து, பிப்ரவரி 11ம் தேதி சட்டப்பேரவை மீண்டும் கூடும் என்று கூறி சபாநாயகர் தனபால்பேரவையை ஒத்திவைத்தார். 

இதையடுத்து, சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் கலந்துகொண்டனர். திமுக சார்பில் பிச்சாண்டி, காங்கிரஸ் சார்பில் ராமசாமி கலந்துகொண்டனர்.

பின்னர், பட்ஜெட் மீதான விவாதம் வருகிற பிப்ரவரி 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் என்றும் 14ம் தேதி பட்ஜெட் உரை மீது ஓபிஎஸ் பதில் அளிப்பார் என்றும் அலுவல் ஆய்வுகூடத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close