சென்னை - பயணி முகத்தில் பிளேடால் வெட்டு... கோயம்பேட்டில் பரபரப்பு !

  டேவிட்   | Last Modified : 08 Feb, 2019 02:15 pm
unknown-person-attacked-passenger-at-koyambedu-bus-stand

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பணம் தர பறுத்த பயணியின் முகத்தில் பிளேடால் வெட்டிய மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

வால்பாறையைச் செர்ந்த சுப்பிரமணி(55) என்பவர் நேற்றிரவு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் சுப்பிரமணியிடம் வழி கேட்பதுபோல் தனியாக அழைத்துச் சென்று தான் வைத்திருக்கும் பணத்தை தருமாறு பிளேடை காட்டி குடிபோதையில் மிரட்டியுள்ளார். சுப்பிரமணி அவருக்கு பணம் தர மறுத்ததால் மர்ம நபர் சுப்பிரமணியின் முகத்தில் தான் வைத்திருந்த பிளேடால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டார். தகவல் அறிந்த கோயம்பேடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சுப்பிரமணியை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி அளித்து அவரை ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 1 ஆம் தேதி இரவு, அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் குரோம்பேட்டையைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரின் கழுத்தை பிளேடால் கிழித்து அவரிடம் இருந்து 500 ரூபாயை பறித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close