ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ஓபிஎஸ், இபிஎஸ்!

  Newstm Desk   | Last Modified : 08 Feb, 2019 02:31 pm
eps-ops-are-in-marina

தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினர்.

2019-20ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் எட்டாவது முறையாக இன்று பேரவையில் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான உரை இரண்டரை மணி நேரமாக நடைபெற்றது. 

பின்னர், பிப்ரவரி 11ம் தேதி சட்டப்பேரவை மீண்டும் கூடும் என்று கூறி சபாநாயகர் தனபால் பேரவையை ஒத்திவைத்தார். இதையடுத்து, சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், பட்ஜெட் மீதான விவாதம் வருகிற பிப்ரவரி 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதன் தொடர்ச்சியாக மெரினாவில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close