சென்னை - பாண்டி பஜாரில் மூன்று கடைகளில் கொள்ளை !

  டேவிட்   | Last Modified : 08 Feb, 2019 02:41 pm
theft-in-3-shops-at-pondy-bazaar

சென்னை பாண்டி பஜாரில் அடுத்தடுத்து 3 கடைகளில் பூட்டை உடைத்து ரூ.20 லட்சத்திற்கும் மேல் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

சென்னை பாண்டி பஜாரில் நேற்றிரவு கடைகள் அடைத்த பின்பு மாடி வழியாக ஒரு கடையின் உள்ளே நுழைந்த மர்ம நபர் ஒருவர் பூட்டை உடைத்து கடையில் இருந்த சுமார் 1 லட்சம் பணம் மற்றும் கைகடிகாரம் ஒன்றையும் திருடியுள்ளார். பின்னர் அதே மாடி வழியாக மேலே சென்ற அவர், அதனருகே இருந்த குடோனில் நுழைந்து திருட முயன்றுள்ளார். அதன் பிறகு மூன்றாவது கட்டிடத்தில் தனியார் பண பறிமாற்றம் மற்றும் விமான பயணச் சீட்டுகள் எடுத்துக் கொடுக்கும் நிறுவனத்தின் கண்காணிப்பு கேமராக்களின் முன் இணைப்பை துண்டித்து விட்டு, அங்கிருந்து 20 லட்சம் ரூபாய்க்கும் மேலான ரொக்க பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளார். 

இதனையடுத்து கடை உரிமையாளர்கள் இன்று காலை கடையை திறந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை நடந்தது தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக கடை உரிமையாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பாண்டிபஜார் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மோப்ப நாய் உதவியுடன் துப்பறிந்து கொள்ளையனை தேடும் பணியில் காவல்துறையினர் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close