பட்ஜெட்டை படிக்காமலே குறை கூறுகிறார் ஸ்டாலின்: தமிழிசை

  Newstm Desk   | Last Modified : 08 Feb, 2019 05:39 pm
tn-budget-2019-tamilisai-opinion

தமிழக பட்ஜெட்டில் ஏழைகளுக்காகவும், விவசாயிகளுக்காவும் நிறைய திட்டங்கள் அறிவிக்கப்படுள்ளன என அதிமுக அரசுக்கு ஆதரவாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

2019-20ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் எட்டாவது முறையாக இன்று பேரவையில் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான உரை இரண்டரை மணி நேரமாக நடைபெற்றது. 

தொடர்ந்து சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்கூட்டத்தில், பட்ஜெட் மீதான விவாதம் வருகிற பிப்ரவரி 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தமிழக பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்துகள் தெரிவித்து வரும் நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, "தமிழக பட்ஜெட் விவசாயத்தையும், விவசாயிகளையும் கவனத்தில் கொண்டு இயற்றப்பட்டுள்ளது. 

பெண் குழந்தைகள் படிப்பிற்கு உதவித்தொகை, அப்துல்கலாம் பெயரில் கல்லூரி, கஜா புயலால் பாதித்தவர்களுக்கு 1 லட்சம் வீடுகள் உள்ளிட்ட திட்டங்கள் வரவேற்கத்தக்கது. 

ஸ்டாலின் பட்ஜெட்டில் குறிப்பிடப்படுள்ளதை பார்ப்பதே இல்லை. முன்னரே முடிவு செய்துவைத்துக் கொண்டு குறைகூறுகிறார். தமிழக பட்ஜெட்டை முழுமையாக படிக்காமலேயே திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து கூறியிருக்கிறார்" என்று தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close