கும்பகோணம் ராமலிங்கம் படுகொலைக்கு ஸ்டாலின் கண்டனம்

  Newstm Desk   | Last Modified : 09 Feb, 2019 12:01 pm
stalin-tweets-about-kumbakonam-ramalingam-murder

கும்பகோணத்தில் ராமலிங்கம் என்பவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழக எதிர்கட்சி தலைவரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கும்பகோணம் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. 

இந்த கொலையில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தி விரைவில் தண்டனை பெற்றுக் கொடுத்து இதுபோன்ற வன்முறைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்!" என பதிவிட்டுள்ளார். 

 

மேலும், "இதுபோன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், எந்த மதத்தினராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து தமிழகத்தில் நிலவும் பாரம்பரியமிக்க மதநல்லிணக்கத்தை போற்றிப் பாதுகாக்க அ.தி.மு.க அரசு முன்வர வேண்டும்" என தெரிவித்துள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close