அனைத்து வாக்குச்சவாடிகளிலும் 10 நாட்களுக்கு மாதிரி வாக்குப்பதிவு..!

  Newstm Desk   | Last Modified : 09 Feb, 2019 11:57 am
sample-polling-for-10-days-in-all-the-polling-stations

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அடுத்த பத்து நாட்களுக்கு மாதிரி வாக்குப்பதிவு செயல்முறை விளக்கம் நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவித்துள்ளார். 

சென்னை  மாநகராட்சி அலுவலகத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் ஒப்புகைச்சீட்டு இயந்திரத்தின் செயல் விளக்க நிகழ்ச்சியை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தொடங்கி வைத்தார். மேலும் பிரச்சார விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், சென்னையில் 913 இடங்களில் இந்த செயல் முறை குறித்து விளக்கம் அளிக்க உள்ளதாக தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, இந்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் இந்தியா முழுவதும் உள்ள வாக்காளர்கள் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்ய ஒப்புகை சீட்டு இயந்திரம் நிறுவப்பட உள்ளதாகவும், தமிழகத்தில்  உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் 10 நாட்களுக்கு விழிப்புணர்வு மற்றும் செயல்முறை விளக்கம் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

புதிய வாக்காளர்கள் இணையதளம் மூலம் வாக்காளர் அட்டைக்கு பதிவு செய்யலாம் எனவும், ஓசூர் தொகுதியை காலியிடமாக அறிவிப்பது குறித்து அரசு தரப்பில் இருந்து அறிவிப்பு வந்தவுடன் முறைப்படி அறிவிக்கப்படும் என தெரிவித்தார். மேலும், ஒரே நேரத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்கள் நடத்த நாங்கள் தயாராக இருப்பதாகவும், ஆனால் இடைத்தேர்தல் குறித்து தலைமை தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்கும் எனவும் அவர் கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close