தமிழகத்தில் பாஜகவை எப்படி வர விடுவோம்: தம்பிதுரை

  Newstm Desk   | Last Modified : 09 Feb, 2019 01:09 pm
how-let-s-come-the-bjp-in-tamil-nadu

திராவிடக் கட்சிகளை தமிழகத்தில் வர விட மாட்டோம் என்று கூறும் பாஜகவை நாங்கள் எப்படி வர விடுவோம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.  

திருச்சி மாவட்டம், மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கருப்பூர், புத்தாநத்தம், பன்னப்பட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளில் மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை  பெற்றார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த அவர், நாட்டில் இன்று தேசியக் கட்சிகளே கிடையாது. எல்லா கட்சிகளும் சில மாநிலங்களில் ஆட்சி செய்கிறது அவ்வளவு தான். தனிப்பட்ட முறையில் எந்த கட்சியும் தேசிய கட்சி என்ற நிலைமையில் இல்லை என தெரிவித்தார். 

அதிமுக - பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்., அத்தைக்கு மீசை முளைத்தா தான் சித்தப்பா என்பார்கள். பாஜகவுடன் இதுவரை கூட்டணி குறித்து நாங்கள் பேசவே இல்லை. திராவிடக் கட்சிகளை தமிழகத்தில் வர விட மாட்டோம் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை கூறுகிறார். திராவிடக் கட்சிகள் வரக்கூடாது என்றால் தேசிய கட்சிகளை நாங்கள் எப்படி வர விடுவோம் என கூறினார். 

மேலும், டெல்லிக்குச் சென்ற தமிழக முதல்வரை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்கவில்லை. எங்களுக்கும் உரிமை, தன்மானம் இருக்கின்றது. எங்கள் இயக்கத்தை யார் மதிக்கிறார்களோ, தமிழகத்திகத்திற்கு யார் நல்லது செய்கிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி என்பதை தமிழக முதல்வர் தெளிவாக கூறி உள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் பாண்டிச்சேரி உட்பட 40  தொகுதிகளிலும் வெற்றி பெறுகின்ற ஒரே தகுதி அதிமுகவுக்கு மட்டுமே உண்டு. பாஜக திமுகவுடன் தொடர்பு வைத்துக் கொண்டு எங்களை பழிவாங்கிக் கொண்டிருக்கின்றது என தெரிவித்தார். 

newstm.in


  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close