இந்து மக்கள் கட்சி உண்ணாவிரத அறப்போராட்டம்: அர்ஜுன் சம்பத் 

  டேவிட்   | Last Modified : 09 Feb, 2019 03:48 pm
hindu-people-s-party-fasting

இந்துத்தமிழ் மக்களின் சமய உணர்வுகளை அவமதிப்போரை கைது செய்திடக் கோரி ஒரு நாள் அடையாள உண்ணாவிரத அறப்போராட்டத்தில் ஈடுபடவள்ளதாக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன்சம்பத் தெரிவித்துள்ளார். 

இந்து மக்கள் கட்சி மற்றும் அனைத்து இந்து சமுதாய அமைப்புகள் ஆன்மிக அமைப்புகள் தமிழ் சமய பிரச்சார பாரதி ஏற்பாட்டில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நாளை (10ஆம் தேதி) காலை 9.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை ஒரு நாள் அடையாள உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெற உள்ளதாக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன்சம்பத் தெரிவித்துள்ளார். 
தமிழ் சமையல் பிரசார் பாரதியின் நிறுவனத்தலைவர் ஜி.கே.ஆர்.கணேஷ் முன்னிலையில் இந்த அறப்போராட்டம் நடைபெறுகிறது. இதில் வலியுறுத்தப்டும் கோரிக்கைகளாவன: 

தமிழகத்தில் தொடர்ந்து இந்து தமிழர்களின் சமய நம்பிக்கைகளை அவமதித்து வரும், ஒருமைப்பாட்டிற்கு விரோதமாக செயல்பட்டு வரும், சென்னை லயோலா கல்லூரி நாட்டுடைமையாக்க வேண்டும். இந்து சமயத்தை அவமதிக்கும் வகையில் ஓவியம் வரைந்த முகிலனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

தமிழகம் முழுக்க கோயில்களுக்கு அருகாமையில் மற்றும் பொது இடங்களில் கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி, கற்பித்தவன் அயோக்கியன் என்கிற வாசகங்கள் அடங்கிய கல்வெட்டுகள், பதாகைகள் இருக்கின்றன ஆன்மீகவாதிகளின் மனதை புண்படுத்தும் இத்தகைய நாத்திக கல்வெட்டுகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

கிராமப்புற ஏழை எளிய மக்கள் பட்டியலின மக்கள் பயன் பெறக்கூடிய வகையில் தாய்மொழிக் கல்வியை அடிப்படையாகக் கொண்ட நவோதயா கல்வி நிறுவனங்கள் தமிழகம் முழுக்க துவங்கப்பட வேண்டும்.

திமுக தலைவர் ஸ்டாலின் முஸ்லிம்களின் திருமண விழாவில் கலந்து கொண்டு தமிழர்களின் இந்து சமய திருமண சடங்குகளை அவமதித்து பேசியிருப்பது சட்டப்படி குற்றமாகும். தமிழக அரசாங்கம் மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து மதக்கலவரத்திற்கு வித்திடும் வகையில் தொடர்ந்து பேசி வருகின்றது. இந்து திருமணச் சடங்குகளை அவமதித்த ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தியாகி இராமலிங்கம் குடும்பத்தாருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டும்.  ராமலிங்கத்தின் குடும்பத்தாருக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும். 

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் கூடிய தமிழக இந்துக்களுக்கு நியாயம் கிடைக்க முதலாமைச்சர் இந்த விஷயத்தில் நேரடியாக கவனம் செலுத்தி கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என அர்ஜுன்சம்பத்  கோரிக்கை விடுத்துள்ளார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close