தமிழகத்தில் கூட்டணியோடு தேர்தலில் போட்டி : தமிழிசை

  Newstm Desk   | Last Modified : 09 Feb, 2019 05:55 pm
coalition-will-be-set-up-in-the-election

தமிழகத்தில் பாஜக தனித்து தேர்தலை சந்திக்கும் சூழல் இல்லை எனவும் திமுக காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும் எனவும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஒவ்வொரு முறையும் பிரதமர் வருகையின் போது பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், பிரதமரின் வருகையை  ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்நோக்குவதாகவும் தெரிவித்தார். பாஜக அரசு மீது விமர்சனங்களை வைக்க முடியாத எதிர்கட்சிகள் ரபேல் என்ற செத்த குதிரையை வைத்து அரசியல் செய்வதாகவும், பிரதமரை விமர்சிக்க மம்தா பானர்ஜிக்கு என்ற தகுதியும் இல்லை எனவும் அவர் கூறினார்.

தமிழகத்தில் 6 மாதங்களுக்கு முன்பே பாஜக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டதாக கூறிய அவர், பிரதமர், பாஜக தேசிய தலைவர், அமைச்சர்களின் வருகை பாஜகவினரை உற்சாகப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் பாஜக தனித்து தேர்தலை சந்திக்கும் சூழல் இல்லை எனவும் திமுக காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும் என கூறினார். 

newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close