குற்றவாளியை பிடித்த போலீசாருக்கு ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டு

  Newstm Desk   | Last Modified : 09 Feb, 2019 06:20 pm
appreciate-the-policeman-for-arrested-the-criminal

சென்னை, ஆதம்பாக்கம் மற்றும் மடிப்பாக்கம் பகுதிகளில் 17க்கும் மேற்பட்ட வீடுகளில் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடிய குற்றவாளியை கைது செய்து அவரிடம் இருந்த நகைகளை பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை சென்னை பெருநகர காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டினார்.  

எஸ்.7 மடிப்பாக்கம் காவல் நிலைய தலைமைக்காவலர் விஜயகாந்த் என்பவர் கடந்த 31ம் தேதி காலை 10.45 மணியளவில் வேளச்சேரி, தண்டீஸ்வரன் நகர் பகுதியில் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, குற்ற சம்பவங்களின் சிசிடிவி கேமரா காட்சியில் பதிவான ஒருவர் அவ்வழியே செல்வதை கண்டு, அந்த நபரை பின் தொடர்ந்துள்ளார். அப்போது, சான்ட்ரோ காரை திறந்து ஏற முற்படும் போது, பிடித்து விசாரித்துள்ளார்.

உடனே அந்த நபர் காரில் இருந்த பெப்பர் ஸ்பிரேவை எடுத்து விஜயகாந்த் முகத்தில் தெளித்து விட்டு தப்ப முயன்றுள்ளார். இதனால் கண் எரிச்சல் அடைந்த காவலர் குற்றவாளியை பிடிக்க உதவி செய்யுங்கள் என சத்தம் போட்டுள்ளார். சத்தம் கேட்டு வந்த ஆட்டோ ஓட்டுனர் மோகனசுந்தரம் உதவியுடன் அவரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் சுந்தர் (எ) புறா ராஜ் (35) என்பதும், சைதாப்பேட்டையில் தங்கியிருந்து மடிப்பாக்கம் மற்றும் ஆதம்பாக்கம் பகுதிகளில் 17 வீடுகளின் பூட்டை உடைத்து திருடியதும், கோவையில் இவர் மீது ஒரு கொலை வழக்கு உள்ளதும் தெரியவந்தது.  இதையடுத்து, அவர் கொள்ளையடித்த நகை மற்றும் பொருட்களை மீட்க மடிப்பாக்கம் சரக காவல் உதவி ஆணையாளர் கெங்கைராஜ் தலைமையில் ஆதம்பாக்கம் காவல்நிலைய ஆய்வாளர் முரளி, மடிப்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாண்டிதுரை, மடிப்பாக்கம் காவல்நிலைய தலைமைக்காவலர் விஜயகாந்த் உள்ளிட்ட 10 பேர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. 

இவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு கோவையில் உள்ள சுந்தரின் 2வது மனைவி கீதாவிடமும், அடகு கடைகளிலும் வைத்திருந்த 90சவரன் தங்க நகைகள், 3லேப்டாப், 1 செல்போன், 2 டேப், ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் குற்ற சம்பவங்களுக்கு பயன்படுத்திய கார் மற்றும் 3 கத்திகளை பறிமுதல் செய்தனர். மேலும், அடகு வைத்துள்ள 40 சவரன் தங்க நகைகளை மீட்க தனிப்படை போலீசார் சட்டபூர் வ நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

இந்நிலையில், குற்றவாளியை பிடித்து அவரிடம் இருந்து 90 சவரன் நகை மற்றும் பொருட்களை மீட்ட தனிப்படை போலீசாரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று நேரில் அழைத்து சான்றிதழ்களும் , வெகுமதிகளும் வழங்கி கௌரவித்தார். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

இதை மிஸ் பண்ணாதீங்க...

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close