டிடிவி தினகரன் மீண்டும் அதிமுகவில் சேர ஓபிஎஸ் அழைப்பு!

  Newstm Desk   | Last Modified : 09 Feb, 2019 10:19 pm
ops-calls-ttv-to-join-hands-with-admk

வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக தேசிய மற்றும் மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறியுள்ள துணை முதல்வர் ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் சேர அழைத்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக, பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என கூறப்பட்டு வரும் நிலையில், இன்று தேனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ், கூட்டணி தொடர்பாக தேசிய மற்றும் மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக உறுதி செய்தார்.

கட்சியை விட்டு பிரிந்து சென்றவர்கள், மீண்டும் கட்சியில் இணைய வேண்டுமென ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பு டிடிவி தினகரன் உள்ளிட்ட அனைவருக்கும் பொருந்தும் என்றும் அவர் கூறினார். எப்போது வேண்டுமானாலும் தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக இருப்பதாக கூறிய அவர், நாடாளுமன்ற தேர்தலுடன் 21 பேரவை தொகுதிகளுக்கான தேர்தலும் நடைபெறம் என்று தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close