முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தார் ரஜினிகாந்த்

  Newstm Desk   | Last Modified : 10 Feb, 2019 08:58 am
rajini-meets-chief-minister-edappadi-palanisamy

நடிகர் ரஜினிகாந்த், தனது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் - தொழிலதிபர் விசாகன் திருமணத்தில் கலந்து கொள்ள, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நேரில் சென்று இன்று அழைப்பிதழ் வழங்கினர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த், முன்னாள் அமைச்சர் வணங்காமுடியின் மகன் விசாகனை திருமணம் செய்கிறார். இருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, இரு தினங்களுக்கு முன் சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிலையில், நாளை அவர்களின் திருமணம் நடைபெறுகிறது.

திருமணத்தில் கலந்து கொள்ள, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரில் சென்று ரஜினிகாந்த் இன்று காலை அழைப்பிதழ் வழங்கினார். திமுக தலைவர் முக ஸ்டாலின், முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்டோருக்கும் ரஜினிகாந்த் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close