ஸ்டாலினை கமல் எப்படி விமர்சிக்கலாம்? காங்கிரஸ் தலைவர் பாய்ச்சல்

  Newstm Desk   | Last Modified : 10 Feb, 2019 01:26 pm
congress-leader-ks-alagiri-fires-at-kamal-criticizing-dmk

திமுகவின் அழுக்குப் பொதிகளை சுமக்க மாட்டோம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியிருந்தது, பாரதிய ஜனதாவுக்கு சாதகமாக அமையும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி விமர்சனம் செய்துள்ளார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்கப் போவதில்லை, என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். திமுகவுடன் கூட்டணி வைப்பது குறித்து சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட போது, மற்றவர்களின் அழுக்கு பொதியை தான் தாங்கள் சுமக்க தயாராக இல்லை, என கமல்ஹாசன் தெரிவித்தார். 
அதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி நடிகர் கமலஹாசனை கூட்டணிக்கு அழைத்து அறிக்கை வெளியிட்டிருந்தார். 

காங்கிரஸ் கட்சியின் கூட்டணியான திமுகவை கமல்ஹாசன் கடுமையாக விமர்சித்த நேரத்தில், அழகிரி அவரை கூட்டணிக்கு அழைத்தது கடுமையாக விமர்சனத்துக்குள்ளானது.

இந்நிலையில் இது குறித்து தெளிவுபடுத்தியுள்ள அழகிரி, தான் அறிக்கை வெளியிட்ட போது, ஸ்டாலினுக்கு எதிரான கமல்ஹாசனின் சமீபத்திய கருத்துக்களை தெரிந்து கொள்ளாமல், அவரை கூட்டணிக்கு அழைத்ததாக விளக்கம் அளித்துள்ளார். மேலும், திமுகவையும் ஸ்டாலினையும் கமல்ஹாசன் கடுமையாக விமர்சித்து உள்ளதாகவும்; இது வரும் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு சாதகமாக அமையும், என்றும் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "கமல்ஹாசன் அவர்கள் இத்தகைய விமர்சனம் செய்திருப்பது தேர்தல் நேரத்தில் பா.ஜ.க-வுக்கு உதவுமே தவிர, அவர் ஏற்றுக்கொண்டதாகக் கூறப்பட்ட காந்த கொள்கைகளுக்கும் உதவாது. அவர் அவசியமில்லாமல், தேவையில்லாமல் தி.மு.க.-வை விமர்சித்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close