பட்ஜெட்டில் வேலைவாய்ப்புக்கான திட்டங்கள் இல்லை: சரத்குமார்

  Newstm Desk   | Last Modified : 10 Feb, 2019 02:12 pm
there-are-no-plans-for-employment-in-the-budget-sarath-kumar

தமிழக பட்ஜெட்டில் கடன் சுமையை குறைப்பதற்கான தொலைநோக்கு திட்டங்கள் மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார். 

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக பட்ஜெட் பட்டியலிட்டு வரவு செலவு கணக்கு கொடுத்தது போல் இருப்பதாகவும், 2011ம் ஆண்டில் ரூ. 1 லட்சம் கோடியாக இருந்த கடன் தற்போது, 3 லட்சத்து 90 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். அத்திக்கடவு- அவினாசி திட்டம் வரவேற்கதக்கது என்றாலும், வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கும், கடன் சுமையை குறைப்பதற்குமான தொலை நோக்கு திட்டங்கள் எதுவும் தமிழக பட்ஜெட்டில் இல்லை எனக் கூறினார். 

விவசாயிகளுக்கு கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்த ரூ. 8,000 கோடி மதிப்பிலான திட்டம் நிறைவேற்றப்படாமல்  உள்ள நிலையில் தற்போது, 10,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், பட்ஜெட்டில் அறிவித்திருக்கும் திட்டங்களை சரிவர நிறைவேற்றினால் நன்றாக இருக்கும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார். 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close