மோடியிடம் கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய இருக்கின்றன: சிதம்பரம் ட்வீட்

  Newstm Desk   | Last Modified : 10 Feb, 2019 02:22 pm
p-chidambaram-tweets-about-modi-s-visit-to-tn

பிரதமர் மோடி தமிழகம் வருவது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

பிரதமர் மோடி இன்று  திருப்பூர் சென்று அங்கிருந்து மத்திய அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கவுள்ளார். சமூக வலைதளங்களில் அவருக்கு எதிர்ப்பும் வரவேற்பும் ஒருசேர கிடைத்து வருகிறது. 

 

— P. Chidambaram (@PChidambaram_IN) February 10, 2019

 

இந்நிலையில் பிரதமர் வருகை குறித்து முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார். அவர் தனது பதிவில், "தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவித்தது நினைவிருக்கிறதா?. பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் 50,000 குறு, சிறு தொழில்கள் மூடப்பட்டன என்றும் 5 லட்சம் பேர் வேலையிழந்தனர் என்று எழுதியுள்ளார். 

பணமதிப்பு நீக்கம் செய்த திரு மோடி இன்று தமிழ்நாட்டுக்கு வருகிறார். அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய இருக்கின்றன" என தெரிவித்துள்ளார். 

இதனிடையே, ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் அவர் மீதும், அவரின் மகன் கார்த்திக் மீதும், மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற சாரதா சிட்பண்ட் முறைகேடு வழக்கில் சிதம்பரத்தின் மனைவி நளினி மீதும் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகைகள் தொடர்பாக அமலாக்கத்துறையும், சிபிஐ-யும் கேள்விகள் கேட்க வேண்டும், நேரில் வாருங்கள் என்று அழைக்கும்போதெல்லாம், அதற்குத் தடை வாங்கிட நாடெங்கிலும் உள்ள பல்வேறு நீதிமன்றங்களாகத் தேடித் தேடி ஏறி, இறங்கி  தடை பெற்று வருகிறார் ப.சிதம்பரம்.

இந்நிலையில் பிரதமரிடம் கேட்பதற்கு நிறைய கேள்விகள் உள்ளன என்று அவர் கூறியிருப்பது முரண்நகையாக உள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close