கோவை வந்தடைந்தார் பிரதமர் மோடி!

  Newstm Desk   | Last Modified : 10 Feb, 2019 03:03 pm
prime-minister-modi-arrives-at-coimbatore

திருப்பூரில் பல்வேறு நலத் திட்டங்களை துவக்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை வந்திறங்கினார். அவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

ஆந்திராவின் குண்டூரில் நடைபெற்ற பாரதிய ஜனதா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையத்தில் வந்திறங்கினார். விமான நிலையத்தில், பிரதமரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், துணை முதல்வர் ஓபிஎஸ், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பலர் வரவேற்றனர். கோவை விமான நிலையத்திலிருந்து, ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் திருப்பூர் செல்கிறார்.

திருப்பூரில் பல்வேறு நலத்திட்டங்களை அவர் துவக்கி வைக்கிறார். மேலும், சென்னை சென்ட்ரலில் இருந்து வண்ணாரப்பேட்டை வரையிலான மெட்ரோ ரயில் சேவையை, பிரதமர் மோடி காணொலி மூலமாக துவக்கி வைக்கிறார்.

அதன்பிறகு, பிற்பகல் திருப்பூரில் நடைபெறவிருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close