எடப்பாடி அரசை காப்பாற்ற இடைத்தேர்தல் நடத்தாமல் இருக்கும் பா.ஜ.க அரசு: ஸ்டாலின் கண்டனம்!

  Newstm Desk   | Last Modified : 10 Feb, 2019 03:58 pm
stalin-urges-ec-to-conduct-by-elections-with-lok-sabha-election

கூட்டணிக்காக தேர்தல் ஆணையத்தின் துணையோடு இடைத்தேர்தல்கள் நடைபெறாமல் தடுத்து அ.தி.மு.க அரசைக் காப்பாற்ற பா.ஜ.க முயற்சித்தால் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் ஒன்றுதிரட்டி போராடும் சூழல் உருவாகும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "அ.தி.மு.க வுடன் கூட்டணி வைப்பதற்காக தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நடத்த விடாமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்" என்று,  பா.ஜ.க அரசு வாக்குறுதி அளித்து இருப்பதாக வரும் பத்திரிகைச் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.

மேலும், " தேர்தல் ஆணையம் தனக்கு இருக்கும் அரசியல் சட்ட சுதந்திரத்தைப் பயன்படுத்தி தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தலை நடத்திட கேட்டுக் கொள்கிறேன். " எனவும் தெரிவித்துள்ளார்.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close