திருப்பூர் வந்தடைந்தார் பிரதமர் மோடி!

  Newstm Desk   | Last Modified : 10 Feb, 2019 03:39 pm
pm-modi-reached-thirupur-at-3-pm

பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் 3 மணியளவில் திருப்பூர் வந்தடைந்தார். கோவை விமான நிலையத்திலிருந்து அவர் ஹெலிகாப்டர் மூலம் திருப்பூர் வந்தடைந்தார்.

அங்கு அவர்,சென்னை டிஎம்எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான 10 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை தொடக்கம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை  காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து, பெருமாநல்லூரில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

முன்னதாக, கோவை விமான நிலையம் வந்தடைந்த பிரதமரை, தமிழக  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close