பாஜக பெண் ஊழியர் மீது மதிமுக தொண்டர்கள் கொலை வெறித்தாக்குதல்

  Newstm Desk   | Last Modified : 10 Feb, 2019 04:50 pm
attack-on-bjp-administrator-sasikala

திருப்பூரில் பாஜகவை சேர்ந்த சசிகலா மீது மதிமுகவினர் கொலை வெறித் தாக்கதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று திருப்பூர் வருகை தந்தார். பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக தலைவர் வைகோ மற்றும் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர், மோடியே திரும்பிப்போ என்று கூக்குரலிட்டு கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக நிர்வாகி சசிகலா, தன்னந்தனியாக வந்து வைகோவின் மீது தன்னுடைய செருப்பைக் கழட்டி வீசினார். அதையடுத்து அங்கிருந்த மதிமுகவினர் , தாங்கள் வைத்திருந்த மதிமுக கொடிகளை தாங்கி வைத்திருந்த தடிகளால் சசிகலாவின் மண்டை மீது காட்டுமிராண்டித்தனமாக கொலைவெறித்  தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து அங்கிருந்த போலீசார் சசிகலாவை காப்பாற்றி  அழைத்துச் செல்ல முயற்சித்தனர். இருந்தபோதிலும் போலீசாரையும் மீறி மதிமுகவினர் கூட்டமாகச் சேர்ந்து சசிகலாமீது தடியால் தொடர்ந்து தாக்கினர், பின்னர் போலீசார் அவர்களை தடுத்து அரண் அமைத்து, சசிகலாவை காப்பாற்றி அழைத்து சென்றனர். 

இந்நிலையில்,  பிரதமர் நரேந்திர மோடி  மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பாக திருப்பூர் வந்திருந்த நிலையில், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டுமென  தமிழக பாஜக, மாநிலத் தலைவர்களில் ஒருவரான கே.டி.ராகவன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 

 newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close