திருப்பூரில் நலத்திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

  Newstm Desk   | Last Modified : 10 Feb, 2019 03:46 pm
pm-modi-launched-the-metro-rail-service-in-chennai-through-video-conferance

நலத்திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் சென்னை மெட்ரோ ரயில் சேவை துவக்க விழாவில் பங்கேற்பதற்காக, திருப்பூர் வந்த பிரதமர் நரேந்திர மாேடி, அந்த திட்டங்களை துவக்கி வைத்தார்.
திருப்பூரில் அமையவுள்ள, இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய, பிரதமர் நரேந்திர மோடி, சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரி மருத்துவமனையை நாட்டிற்கு அற்பணித்தார். அதை தொடர்ந்து, சென்னை, டி.எம்.எஸ்., - வண்ணாரப்பேட்டை இடையிலான மெட்ரோ ரயில் சேவையை காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார்,

இந்த நிகழ்ச்சியில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், கவர்னர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில், மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close