காங்கிரஸ் ஆட்சியில் கடல் துவங்கி ஆகாயம் வரை ஊழல் : பிரதமர் மோடி

  Newstm Desk   | Last Modified : 10 Feb, 2019 04:37 pm
prime-minister-speech

திருப்பூரில் நடைபெறும் பா.ஜ., பொதுக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசி வருகிறார். 

தமிழர்களையும், விடுதலை போராட்ட வீரர்களையும் புகழ்ந்து தன் உரையை துவங்கிய நரேந்திர மோடி, தொடர்ந்து, திருப்பூர் மக்களைப் பற்றி பேசி வருகிறார். 

கோவையில் வசிக்கும் ஜெயின் சமூக ஆச்சார்யா மகாமுனிக்கு என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். திருச்சியில் ஒருங்கிணைந்த ஏர்போர்ட் வளாகம் அமைவதற்கான அடிக்கல் நாட்டிவிட்டு வந்திருக்கிறேன். 
இதன் மூலம் திருச்சி விமான நிலையம் மேம்படுத்தப்படும். 

திருப்பூர் மற்றும் சென்னையில் உள்ள இ.எஸ்.ஐ.சி., மருத்துவமனைகள் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. புதிய மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. சென்னையில் புதிய எரிபொருள் பைப்லைன் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. 

முறைசாரா தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், ராணுவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. 

பல ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்த முந்தைய காங்கிரஸ் அரசு, நாட்டின் பாதுகாப்பு பற்றிய நடவடிக்கைகளில் கூட, இடைத்தரர்கள் மூலம், கடல் துவங்கி ஆகாயம் வரை ஊழல் செய்தார்கள்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close