ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தியுள்ளோம் : பிரதமர் மோடி

  Newstm Desk   | Last Modified : 10 Feb, 2019 04:11 pm
prime-minister-speech

ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் திட்டத்தை நாங்கள் அமல்படுத்தியுள்ளோம் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "தமிழகத்தில் பாதுகாப்பு பூங்கா அமைய உள்ளது. இதில், ராணுவ தடவாளங்கள் தயாரிக்கப்பட உள்ளன. இதன் மூலம், தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். 

ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் திட்டத்தை நாங்கள் அமல்படுத்தியுள்ளோம். இதற்கு முன் ஆட்சி செய்த காங்., அரசு, ராணுவ வீரர்களை கேவலப்படுத்தியது. அவர்களின் தியாகத்தை கொச்சைபடுத்தியது. அவர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.

அவர்களின் 40 ஆண்டு கால கோரிக்கையை, பா.ஜ., அரசு நிறைவேற்றியுள்ளது. நம் ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை காங்கிரசார் கொச்சைபடுத்தினர். 

முன்னாள் அமைச்சர் ஒருவர் பேசுகையில், நம் ராணுவம், ராணுவ புரட்சி நடத்த முயன்றதாக கூறினார். நம் ராணுவ வீரர்கள் நாட்டை காக்கும் பணியில் ஈடுபடுவரே தவிர ஒரு காலத்திலும் இப்படிப்பட்ட நடவடிக்கையில் ஈடுபட மாட்டார்கள்.

சாகர் மாலா திட்டத்தின் மூலம், இந்தியாவின் கடல் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் திட்டங்களை நாடு முழுவதும் அமல்படுத்தியதன் மூலம், நாட்டின் போக்குவரத்து துறை மேம்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, இன்று சென்னையில் மெட்ரோ  ரயில் சேவை திட்டம் துவக்கப்பட்டுள்ளது. 

சாலைகள் அமைக்கும் பணி, இரு மடங்கு துரிதப்படுத்தப்பட்டுள்ளது. துறைமுகங்கள் மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன" என கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close