இந்தியாவிலேயே மிகப் பெரிய மருத்து காப்பீட்டு திட்டம் அறிமுகம்: பிரதமர் மோடி

  Newstm Desk   | Last Modified : 10 Feb, 2019 04:35 pm
prime-minister-speech

இந்தியாவிலேயே மிகப் பெரிய மருத்து காப்பீட்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். 

திருப்பூரில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் பிரதமரின் உரை: " இந்தியாவிலேயே மிகப் பெரிய மருத்து காப்பீட்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிகக்குறுகிய காலத்தில், 11 லட்சம் பேர், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பயன் அடைந்துள்ளனர். அனைத்து கிராங்களுக்கும் மின்சாரம் என்ற இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.

2022ல் இந்த இலக்கு பூர்த்தியாகும். மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்த உறுதுணையாக இருக்கும் வருமான வரி செலுத்தோருக்கு இந்த அரசு நன்றிக் கடன் பட்டுள்ளது. அதற்காக அவர்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்பதால் தான், ஐந்து லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு அறிவித்து, மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடுத்தர மக்களின் நீண்டநாள் கோரிக்கை பூர்த்தியாகியுள்ளது.

தன்னைத் தானே அதி புத்திசாலி என நினைக்கும் முன்னாள் அமைச்சர், மிஸ்டர் ரீ கவுன்டிங் மினிஸ்டர், அதாவது, மறு வாக்கு எண்ணிக்கை மூலம் தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சர் ஆன ஒருவர் இந்த மாநிலத்தில் தான் வசிக்கிறார். உலகிலேயே அவருக்குத் தான் மிக அதிக அறிவு இருப்பதாக அவர் நினைக்கிறார். அவர் கூறினார், நடுத்தர வர்க்கத்தினர் ஏன் விலை வாசி உயர்வு பற்றி கவலைப்பட வேண்டும். அவர்கள் தான் விலை உயர்ந்த ஐஸ் கிரீம்களையும், மினரல் வாட்டரையும் குடிக்கின்றனரே என்றார். 

இந்த ஆணவ பேச்சுக்காகத்தான், அவர்கள் உங்களை தோற்கடித்துள்ளனர். மீண்டும் தோற்கடிப்பர் இதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஏழை, நடுத்தர மக்களைப் பற்றி கொஞ்சமும் யாேசிக்காத முன்னாள் ஆட்சியாளர்கள், தற்போது விரக்தியில் உள்ளனர். செய்வது அறியாது புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.

மோடியை வசைபாட, எதிர்க் கட்சியினருக்கு தொலைக்காட்சி பெட்டியில் வேண்டுமானால் இடம் கிடைக்கலாம். ஆனால், விவசாயிகள், தொழில்துறையினர், ஏழைகள் என அனைத்து தரப்பினரும், மோடி என்றே கூறுகின்றனர். அவர்கள் இந்த ஆட்சி மீது நம்பிக்கை வைத்துள்ளது.  மக்கள் ஓட்டு போட்டு, மத்தியில் ஓர் ஆட்சியை அமர்த்தியுள்ளனர். இந்த அரசை கண்டு, இடைத்தரகர்கள் பயந்து நடுங்குகின்றனர். போலி கம்பெனிகள் மூடப்பட்டுள்ளன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close