இட ஒதுக்கீட்டால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை: பிரதமர் மோடி

  Newstm Desk   | Last Modified : 10 Feb, 2019 04:38 pm
prime-minister-speech

திருப்பூரில் பிரதமர் மோடி உரை: ஏற்கனவே அமலில் உள்ள இட ஒதுக்கீட்டு முறையில் எந்த மாற்றமும் செய்யாமல், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில், பொதுப் பிரிவு ஏழைகளுக்கு, 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதனால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சமூக நீதி என்பது கணக்கியல் அல்ல. இது நம் நம்பிக்கையில் எடுத்துக்காட்டு. வாஜ்பாய் ஆட்சி காலத்திலும் சில எதிர்க்கட்சிகள் பதற்றத்தை ஏற்படுத்த முயற்சித்தனர். காங்., - தி.மு.க., ஆட்சி காலத்தில், பதவி உயர்வில், எஸ்.சி., - எஸ்.டி.,யினருக்கான இட ஒதுக்கீட்டு முறை ஒழிக்கப்பட்டது. ஆனால், அந்த சமூகத்தினர் நலன் கருதி, வாஜ்பாய் காலத்தில் அந்த முறை மீண்டும் அமல்படுத்தப்பட்டது.

அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும். அனைவருக்குமான வளர்ச்சி என்பதே எங்கள் இலக்கு. இது தான் பா.ஜ., அரசின் எதிர்கால திட்டமும் கூட. இங்கு கூடியிருக்கும் கூட்டத்தினருக்கு வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். வளமான பாரதம் உருவாக உறுதி எடுப்போம். பாரத் மாதா கீ ஜெய்

இவ்வாறு மோடி தன் உரையில் பேசினார்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close