தம்பிதுரையின் கருத்து கழகத்தின் மொத்த கருத்தாகாது: ஆர்.பி.உதயகுமார்

  Newstm Desk   | Last Modified : 11 Feb, 2019 09:56 am
thambi-durai-s-opinion-is-not-the-total-opinion

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையின் கருத்து கழகத்தின் மொத்த கருத்து ஆகாது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். 

மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற தொழில் வர்த்தகப் பொருட்கள் கண்காட்சி நிறைவு விழாவில் பங்கேற்ற வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறந்த தொழில் முனைவோர்களுக்கு பரிசுகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கி சிறப்பித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுகவின் மக்கள் செல்வாக்கை பொறுத்துக்கொள்ள முடியாமல் அரசியல் கார்ப்புணர்ச்சி காரணமாக முக.ஸ்டாலின் முன்வைக்கும் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை எனவும், அரசியலில் நான்கு பேர் நான்கு கருத்துக்களை சொல்லத்தான் செய்வார்கள், அதில் உண்மை உள்ளதா, மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா என்பதை பார்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அ.தி.மு.க அரசிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உயர்ந்து வருவதாகவும், கடந்த தேர்தலில் ஜெயலலிதா கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிட்டாலும் தற்போது கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

பாரதிய ஜனதாவுடன் அ.தி.முக கூட்டணி அமைக்க  தம்பிதுரை எதிர்ப்பு தெரிவித்து வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அவர் ஒரு மூத்தத் தலைவர் அவரது அனுபவத்தின் அடிப்பைடையில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அவரது ஒத்த கருத்து கழகத்தின் மொத்த கருத்தாகாது. ஒத்த கருத்துக்களையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த கருத்துக்களின் அடிப்படையில் தலைமை முடிவெடுக்கும் எனவும் தெரிவித்தார்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close