சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

  Newstm Desk   | Last Modified : 11 Feb, 2019 10:46 am
metro-train-service

சென்னை சைதாப்பேட்டை அருகே உயர் மின்அழுத்த கம்பி அறுந்து விழுந்துள்ளதால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அனைத்து மெட்ரோ ரயில்களும் 20 முதல் 30 நிமிடங்கள் தாமதமாகவே இயக்கப்படுகின்றன.

நேற்று திருப்பூர் வந்த பிரதமர் மோடி, சென்னை ஏ.ஜி-டி.எம்.எஸ் முதல் வண்ணாரப்பேட்டை மெட்ரோ நிலையம் வரை சென்னை மெட்ரோ ரயில் பயணிகள் சேவையை காணொளிக் காட்சி வாயிலாக கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதையடுத்து  சென்னை மெட்ரோ ரயிலில் நேற்றும், இன்றும் (பிப்.10 & 11) அனைத்து வழித்தடங்களிலும் இலவசமாக பயணிக்கலாம் என  அறிவிக்கப்பட்டது. இதனால் மக்கள் கூட்டம் நேற்றும் இன்றும் மெட்ரோவில் அதிகமாக காணப்படுகிறது.

இந்நிலையில் இன்று சென்னை சைதாப்பேட்டை அருகே உயர் மின்அழுத்தக் கம்பி அறுந்து விழுந்துள்ளதால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மெட்ரோ ரயில்களும் 20 முதல் 30 நிமிடங்கள் தாமதமாகவே இயக்கப்படுகின்றன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close