ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடையில்லை - சென்னை உயர் நீதிமன்றம்

  Newstm Desk   | Last Modified : 11 Feb, 2019 11:50 am
madras-hc-hearing-case-related-to-jayalalitha-death

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆணையம் விசாரணையை தொடர்ந்து செய்யலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஆறுமுகசாமி ஆணையம் விசாரிப்பதற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

அந்த மனுவில், ஆறுமுகசாமி ஆணையை ரத்து செய்துவிட்டு அதற்கு பதிலாக தமிழக அரசு சாராத 21 மருத்துவர்கள் கொண்ட ஒரு குழுவை விசாரணைக்காக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமகிருஷ்ணன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி அப்பல்லோ தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்துவிட்டனர். 

விசாரணையில், சசிகலா எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், தொடர்ந்து எதிர்மனுதாரர்கள் அனைவரும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close