ஜாக்டோ- ஜியோ போராட்டம் குறித்து திமுக கவன ஈர்ப்பு தீர்மானம்!

  Newstm Desk   | Last Modified : 11 Feb, 2019 11:36 am
dmk-brings-resolution-about-jactto-geo

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான நடவடிக்கையை கைவிட வேண்டும் என திமுக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்துள்ளது. மேலும் அந்த அமைப்பின் நியாயமான கோரிக்கைகளை ஏற்கவும் திமுக வலியுறுத்தியுள்ளது. 

ஊதிய உயர்வு, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளைவ வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர் போராட்டத்தை நடத்தி வந்தனர். பின்னர் பல்வேறு கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகும், முதல்வரின் கோரிக்கையினை ஏற்றும், போராட்டம் கைவிடப்பட்டது

ஆனால், இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது அரசு பணியிடை நீக்கம், இடமாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 

இந்நிலையில் இன்று ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான நடவடிக்கையை கைவிட வேண்டும் என திமுக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்துள்ளது. மேலும், ஜாக்டோ ஜியோ அமைப்பின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close