லோக் ஆயுக்தா உறுப்பினர்களை 8 வாரத்திற்குள் நியமிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

  Newstm Desk   | Last Modified : 11 Feb, 2019 12:30 pm
sc-ordered-tn-govt-about-lok-ayukta

தமிழகத்தில் லோக் ஆயுக்தா உறுப்பினர்களை 8 வாரத்திற்குள் நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மேலும், உறுப்பினர்களை தேர்வு செய்த பின்னர் 4 வாரத்திற்குள் லோக் ஆயுக்தா அமைப்பை செயல்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக் ஆயுக்தா தொடங்குவது குறித்து தமிழக அரசு தீவிரப்பணிகளில் ஈடுபட்டுள்ளது. 

முன்னதாக, லோக் ஆயுக்தாவின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுக்குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தேர்வு செய்யப்பட்டார். தேர்வுக்குழுவின் உறுப்பினர்களாக முன்னாள் அட்வகேட் ஜென்ரல் கிருஷ்ணமூர்த்தி, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

இதன்படி, லோக் ஆயுக்தா தலைவர், செயலாளர், இயக்குநர், சார்பு செயலாளர் உள்ளிட்ட 26 பணியிடங்களுக்கான உறுப்பினர்களுக்கான பட்டியலை 8 வாரத்திற்குள் இறுதி செய்யவேண்டும். பட்டியல் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், லோக் ஆயுக்தா அமைப்பை 4 வாரங்களுக்குள் தமிழக அரசு அமைக்க வேண்டும் என இன்று நடைபெற்ற வழக்கின் விசாரணையில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close