மாரடைப்பு ஏற்பட்ட போதும் பயணிகளை பாதுகாத்த ஓட்டுநர் உயிரிழப்பு..!

  Newstm Desk   | Last Modified : 11 Feb, 2019 02:13 pm
bus-driver-death-by-heart-attack

சென்னை நெற்குன்றம் அருகே பணியின் போது அரசு பேருந்து ஓட்டுநர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூரில் இருந்து சென்னைக்கு வந்த எஸ்.சி.டி.சி பேருந்து சென்னை நெற்குன்றம் பேருந்து நிறுத்தம் அருகே வந்துகொண்டிருந்தபோது, ஓட்டுநர் ரமேஷ் (55) என்பவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் பயணிகளின் பாதுகாப்பு கருதி பேருந்தை அந்த இடத்திலேயே நிறுத்திவிட்டு வலியால் துடித்துள்ளார்.

இதைக் கண்ட பயணிகள் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஓட்டுநர் ரமேஷின் உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. நெஞ்சு வலி ஏற்பட்டும் பேருந்தை கவனமாக எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு ஓட்டுநர் ரமேஷ் அங்கேயே நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close