திருமண விழாவில் ஒரே மேடையில் மு.க.ஸ்டாலின் - கமல்ஹாசன்!

  Newstm Desk   | Last Modified : 11 Feb, 2019 02:49 pm
kamal-haasan-mk-stalin-meet-today

திருவள்ளூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் மகளுக்கும், பாலிமர் டிவி நிறுவனர் மகனுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. திமுக தலைவர் முக ஸ்டாலின் இந்த திருமணத்தை நடத்தி வைத்தார். இந்த திருமண விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனும் கலந்துகொண்டார். அரசியல் கொள்கைகளை தாண்டி இருவரும் ஒரே மேடையில் இருந்தது பார்வையாளர்களை அதிர்ச்சியடைய செய்தது. 

நாடாளுமன்றத் தேர்தல் வருவதையொட்டி, கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. தேர்தல் கூட்டணி குறித்தும் ஆங்காங்கே ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன், திமுக மற்றும் அதிமுகவுடன் கூட்டணியில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் திமுக கட்சி கறை படிந்த கட்சி என்றும் விமர்சித்திருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக தனது முரசொலி இதழில், கமலை விமர்சித்து கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. 

ஆனால், அதே நேரத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவரான கே.எஸ்.அழகிரி, கமலை காங்கிரஸ் பக்கம் இழுக்க முயற்சித்து வருகிறார்.

இந்த சூழ்நிலையில், ஸ்டாலின், கமல் இருவரும் இன்று ஒரே மேடையில் அமர்ந்ததுடன், ஒருவருக்கொருவர் சகஜமாக பேசிக்கொண்டனர். இது தற்போதையை அரசியல் சூழ்நிலையில் முக்கிய ஒன்றாக பார்ப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close