11 மற்றும் 12ம் வகுப்புக்கான மாதிரி வினாத்தாள் வெளியீடு!

  Newstm Desk   | Last Modified : 11 Feb, 2019 03:26 pm
tn-school-education-department

11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான மாதிரி வினாத்தாள் இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 16ம் தேதி முதல் ஏப்ரல் 20ம் தேதி வரையிலும், பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 7ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 16ஆம் தேதி வரையிலும், பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஒரு மதிப்பெண் வினாக்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இதுவரை, 4 விடைகளுள் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் Choose the best answer இருக்கும். ஆனால், தற்போது ஒரு மதிப்பெண் வினாக்களில் 'கோடிட்ட இடங்களை நிரப்புக(Fill in the blanks), பொருத்துக(Match the following), சரியான வாக்கியம் மற்றும் அதன் காரணம்(Assertion & Reason)' போன்றவை இடம் பெறுகின்றன. 

ஏற்கனவே முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மானவர்க்ளின் நலன் கருதி இதற்கான மாதிரி வினாத்தாள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மாதிரி வினாத்தாளை பெற மாணவ, மாணவிகள் http://www.tn.gov.in/schedu/ , http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளங்களை காணலாம். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close