திருபுவனம் படுகொலை: கொலையாளிகள் பயன்படுத்திய கார் உரிமையாளர் கைது!

  Newstm Desk   | Last Modified : 11 Feb, 2019 04:39 pm
thirupuvanam-murder-killers-used-car-owner-arrested

திருபுவனம் ராமலிங்கம் படுகொலை வழக்கில் கொலையாளிகள் பயன்படுத்திய காரின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 

கும்பகோணத்தை அடுத்த திருபுவனத்தில், மதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த ராமலிங்கம் என்பவர் கடந்த 5ம் தேதி இஸ்லாமியர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய 8 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று கொலையாளிகள் பயன்படுத்திய கார் திருச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த கார் கும்பகோணத்தை சேர்ந்த முகமது இப்ராஹிம் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் இன்று முகமது இப்ராஹிமை கைது செய்து, மதியம் கும்பகோணத்தில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close