ராமலிங்கம் படுகொலை: தஞ்சையில் நாளை கடையடைப்பு போராட்டம்

  Newstm Desk   | Last Modified : 11 Feb, 2019 04:38 pm
struggle-at-tomorrow-in-thanjavur

தஞ்சையில் திருபுவனம் ராமலிங்கம் படுகொலையை கண்டித்து நாளை திட்டமிட்டப்படி போராட்டம் நடைபெறும் என இந்து அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனத்தில் மதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படுகொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தஞ்சை மாவட்டத்தில் நாளை கடையடைப்பு போராட்டத்திற்கும் கும்பகோணம் நகரில் அமைதிப் பேரணி நடத்துவதற்கும் இந்து அமைப்பினர் அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்நிலையில்  போராட்டங்களை கைவிட கோரி கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று ஆர்டிஓ வீராசாமி தலைமையில் தஞ்சை ஏடிஎஸ்பி பாலச்சந்திரன், கும்பகோணம் டிஎஸ்பி செங்கமலக்கண்ணன், திருவிடைமருதூர் டிஎஸ்பி ராமச்சந்திரன், கும்பகோணம் தாசில்தார் ஜானகிராமன் திருவிடைமருதூர் தாசில்தார் ராஜராஜேஸ்வரி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், இந்து அமைப்பினர் வெளிநடப்பு செய்தனர். மேலும் திட்டமிட்டபடி நாளை தஞ்சை மாவட்டத்தில் கடையடைப்பு பேராட்டமும், கும்பகோணத்தில் ராமலிங்கம் படுகொலையை கண்டித்து அமைதி பேரணியும்  நடைபெறும் என்றும் இந்து அமைப்பினர் தெரிவித்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close