மாணவிகளை அழைத்துச் சென்று தனது பணிகள் குறித்து விளக்கமளிக்கும் திருவண்ணாமலை ஆட்சியர்!

  Newstm Desk   | Last Modified : 11 Feb, 2019 06:01 pm
thiruvannamalai-collector-explains-about-his-duties-to-students

திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி அம்மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு ஆதரவாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பெண்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பில் பின்தங்கிய மாவட்டமாக இருந்த திருவண்ணாமலை மாவட்டத்தை தற்போது அவற்றில் முன்னேறி வருவதற்கு வித்திட்டவர் ஆட்சியர் கந்தசாமி என்று சொன்னால் மிகையாகாது. 

எளிமையான வாழ்க்கையை கடைபிடிக்கும் அவர், எளியவர்களின் வாழ்வு உயரவும் பல்வேறு வகையில் உதவி செய்து வருகிறார். இந்நிலையில் திருவண்ணாமலை பள்ளி ஒன்றில் நடந்த கடிதப்போட்டியில் வெற்றி பெற்ற 10 மாணவிகளுக்கு தனது பணிகள் குறித்து விளக்கமளிக்கிறார் ஆட்சியர் கந்தசாமி. 

போட்டியில் வென்ற 10 மாணவிகளையும் இன்று காலை முதலே தன்னுடன் காரிலே அழைத்துச் சென்று அவர்களுக்கு தான் தினமும் செய்யும் பணிகள் என்னென்ன என்பது தொடர்பாக விளக்கமளித்து வருகிறார். 

ஆட்சியர் கந்தசாமியின் இந்த செயல் மாணவிகள் மத்தியில் ஆர்வத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தாங்களும் அவரை போன்று ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவோம் என்று அந்த மாணவிகள் கூறியுள்ளனர். 

ஆட்சியர் கந்தசாமி இதுபோன்று செயல்களின் மூலம்  அம்மாவட்ட மக்களிடையே நன்மதிப்பை பெற்றுள்ளார். பெண் குழந்தைகள் பாதுகாப்பில் நடவடிக்கை எடுத்த அவரது செயலை பாராட்டி சமீபத்தில் மத்திய அரசு அவருக்கு விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close